கண்டி மாவட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு : இன்றுமாலை வெளியான அறிவிப்பு
இலங்கையை உலுக்கிய இயற்கை பேரிடர் காரணமாக கண்டி மாவட்டத்தில் இன்றைய(01) நிலவரப்படி 131 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 174 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில், கண்டி மாவட்டத்தில் 21,927 குடும்பங்களைச் சேர்ந்த 50,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இடப்பெயர்வு, வீடுகள் சேதம்
மேலும், 10,959 பேர் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களில் 8,864 குடும்பங்களைச் சேர்ந்த 33,474 பேர் 349 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் உறவினர் வீடுகளில் வசித்து வருவதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் குறிப்பிட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் 532 வீடுகள் முழுமையாகவும், 4,451 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |