தமிழ் தேசியக் கட்சிகளின் முகத்திரையை கிழிக்க திட்டம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13 ஆவது திருத்த சட்டத்திற்குள் தமிழ் மக்களை அடகு வைக்கப்போவதாக தெரிவித்து அதிலிருந்து வெளியேறிய கட்சிகள் தற்போது 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால் 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்தும் 6 தமிழ் அரசியல் கட்சிகளின் உண்மை முகத்திரையை வெளிக்கொண்டு வரும் நேரம் தற்போது உருவதாகியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜா காண்டீபன் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அதற்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் 13 ஆவது திருத்ததிற்கு எதிராக 30 ஆம் திகதி நல்லுாரில் போராட்டம் ஒன்றைய மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் வடக்கைப் பிரதிநிதிதுவப்படுத்தும் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் நேற்றைய தினம் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து ஒற்றையாட்சி தொடர்பில் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
இதன்பின், உடன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளனர்.
