13ஐ வைத்து நடத்தப்படும் அரசியல் நாடகம்! நீதி அமைச்சர் சீற்றம்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள ஒத்திசைவுப் பட்டியலை நீக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை, 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் நாடாளுமன்றம் அனுமதிக்கும் விடயத்தை மட்டுமே அதிபர் செயற்படுத்துவார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது,காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு பணியகம், நல்லிணக்க அலுவலகம் என எனது அமைச்சின்கீழ் மூன்று நிறுவனங்கள் உள்ளன.
இதன்மூலம் நடமாடும் சேவை என பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன,வடக்கில் மக்கள் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா போன்ற அரசியல்வாதிகள் அடிப்படைவாத நிலைப்பாட்டில் இல்லை, ஒரு சில எம்.பிக்களே 13 ஐ முழுமையாக அமுலாக்குமாறு கோரினர்.
இது சம்பந்தமான யோசனைகளை முன்வைக்கவும், அமுலாக்குவதா இல்லையா என்பது குறித்து என்னால் தீர்மானம் எடுக்க முடியாது.
நாடாளுமன்றத்தில் முன்வைத்து, அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை செயற்படுத்துகின்றேன் என அதிபர் இதற்கு பதிலளித்துள்ளார்.
இது நாடாளுமன்றத்துக்கு உரிய பணி, அனைத்து கட்சிகளும் இணக்கத்துக்குவரும் விடயத்தை எம்மால் செய்ய முடியும் எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த 13 ஆவது திருத்தச்சட்டம் அரசியலுக்காகவும் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. அதற்காக போராடுகின்றோம் என வடக்கு அரசியல்வாதிகளால் அம்மக்கள் மத்தியில் கருத்து உருவாக்கப்படலாம்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.