13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தமிழர்களுக்கான தீர்வாக அமையாது - சிவாஜிலிங்கம்
13th amendment
India
By Vanan
இந்தியாவின் தலையீட்டுடன் கொண்டுவரப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு திருத்தமானது, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக அமையாது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை சுட்டிக்காட்டி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் உள்ள அவர், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் நாட்டு தலைவர்களை சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தி வருவதாகவும் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறியுள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி