இம்ரான் கான் மீது அதிரடியாக பாய்ந்த 14 வழக்குகள் !
பாகிஸ்தான் (Pakistan) முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சசர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதன் காரணமாக இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட மொத்த வழக்குள் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
அரசு அலுவலகங்கள்
நவம்பர் 24 ஆம் திகதி நடைபெற்ற வன்முறை தொடர்பாக இம்ரான் கான் மீது புதிதாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என இஸ்லாமாபாத் காவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி நவம்பர் 24 ஆம் திகதி போராட்டம் நடத்தியது.
இந்தப் போராட்டம் இஸ்லாமாபாத்தின் டி-சௌக் பகுதியில் நடைபெற திட்டமிடப்பட்டதுடன் இங்கு பெரும்பாலான அரசு அலுவலகங்கள் உள்ளன.
புலனாய்வு அமைப்பு
போராட்டத்தின் அங்கமாக பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியின் ஆதரவாளர்கள் நவம்பர் 26 அன்று இரவு டி-சௌக் அருகே வந்த போது வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்டனர்.
இம்ரான் கானின் சகோதரிகளில் ஒருவரான நொரீன் நியாசி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இம்ரான் கான் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்தநிலையில், இதற்கு பதில் அளித்த தேசிய பாகிஸ்தான் ஊழல் எதிர்ப்பு நிறுவனம் (NAB) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு விவரங்களை சமர்பித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |