தாயின் கண்டிப்பு - உயிரை மாய்த்த 14 வயது சிறுவன் - யாழில் துயரம்!
Jaffna
Jaffna Teaching Hospital
Death
By Pakirathan
தாய் கண்டித்தமையால் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த 14 வயது சிறுவனை அவனது தாய் கண்டித்தமையினால் இந்த தவறான முடிவை சிறுவன் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுவன் தற்கொலை

குறித்த சிறுவன் தனது உயிரை மாய்க்க முற்பட்டநிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிட்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இறப்பு தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினரும், யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரியும் மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி