வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கென வழங்கப்படும் 15,000 ரூபாய் நிதியால் கிராம சேவகர்களையும் மக்களையும் மோத விடாதீர்கள் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என அரசாங்கத்தால் 25,000 ரூபாய் கொடுப்பனவுக்காக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த பதிவுகள் தற்போது நிறைவடைந்த நிலையில் இரண்டாவது கட்டமாக அதே குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 15,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்காக பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவு
25,000 ரூபாய் கொடுப்பனவானது சிறிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சிறிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வசதி படைத்த அனைவருக்கும் வழங்கப்பட்ட கொடுப்பனவு.
அதே குடும்பத்திற்கு மீண்டும் 15,000 ரூபாய் கொடுப்பதற்கு பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்படாத, மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்கள் உள்ளன.

அந்த குடும்பங்களில் 3,4 பிள்ளைகள் கூட கல்வி கற்கின்ற நிலை காணப்படுகிறது. அவர்கள் அந்த கொடுப்பனவுக்கு உள்வாங்கப்படாமல் போகின்ற சூழ்நிலை அங்கே காணப்படுகிறது.
வசதி படைத்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் 25,000 ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்படுகிறது, அதேவேளை அந்த குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு 15,000 ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.
அனைத்து மாணவர்களுக்கும் கொடுப்பனவு
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நிவாரணம் கிடைக்காத நிலையில் கிராம சேவகர்கள், மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் முரண்படுகின்றனர். இந்த அனர்த்தத்தில் உத்தியோகத்தர்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் பணி புரிந்தார்கள்.
இந்தநிலையில் இது அவர்களை மேலும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும். இந்த கொடுப்பனவு கிடைக்காத பல வறிய மாணவர்கள் மனவேதனைக்குள்ளும் தள்ளப்படக்கூடய சூழ்நிலை காணப்படுகிறது.
எனவே இந்த கொடுப்பனவானது அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அனைவருக்கும் வழங்கும்போது மாணவர்களுக்குள்ளும் மனஸ்தாபங்கள் ஏற்படாது.
இது குறித்து அரசாங்கமும், அரச அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்க அதிபர் இதனை ஆளுநர் மட்டத்திற்கு கொண்டு சென்ற அனைத்து மாணவர்களுக்கும் கொடுப்பனவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்''என்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |