தையிட்டி விகாரை காணி உரிமை விவகாரம் : அநுர அரசின் நடவடிக்கை
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு - தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள காணியின் உரித்து தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க (Gamagedara Disanayaka) தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் (Ramalingam Chandraseka) தலையீட்டுடன் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தசாசன, மத மற்றும் கலாசார பிரதி அமைச்சர் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
விகாரை அமைந்துள்ள காணி
அத்துடன் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நீதியான தீர்மானத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தொடர்பான சர்ச்சை தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்த நிலையில், பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்துள்ளதாகவும் கமகெதர திசாநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |