கம்பளையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி: சந்தேகநபரும் உயிரிழப்பு
🛑புதிய இணைப்பு
கம்பளையில் சிறுமி ஒருவர் கூறிய ஆயுத்தத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரும் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 27 வயதுடைய நபரொருவரே உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்பளையில் சிறுமி ஒருவர் கூறிய ஆயுத்தத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்கு கம்பளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த சந்தேகநபர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் தொழில் புரிந்த குறித்த இளைஞர் நேற்றிரவு (14) வீடு திரும்பியிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑முதலாம் இணைப்பு
கம்பளையில் சிறுமி ஒருவர் கூறிய ஆயுத்தத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.
மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல் பிரிவு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கம்பளை காவல் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கான நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
3 நாட்கள் முன்