ஒக்டோபரில் நாட்டுக்கு வந்து குவிந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்தின் முதல் 09 நாட்களில் 46,868 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள நிலையில் 14,221 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
இதே காலப்பகுதியில் சீனா, பிரித்தானியா, ஜேர்மன், பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,772,362 என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த ஆண்டின் இதுவரையா காலப்பகுதியில் ஜனவரி மாதத்திலேயே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
