தேர்தல் சட்டங்களை மீறிய 18 வேட்பாளர்கள் அதிரடியாக கைது
தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
காவல்துறை ஊடகப் பிரிவு (Police Media) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் நேற்று (16) வரை குறித்த வேட்பாளர்கள் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழு
அத்துடன் இந்தக் காலப்பகுதியில் 62 கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 14 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கிடையில், தேர்தல் தொடர்பான 38 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறிய 138 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
எதிர்வரும் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஏப்ரல் மாதம் தபால் மூல வாக்களிப்பு 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அன்றைய தினம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
