யாழில் தவறான முடிவெடுத்து 19 வயது இளைஞர் பலி!
யாழில் தவறான முடிவெடுத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாரந்தனை பகுதியில் இன்று (07-08-2026) குறித்த இளைஞர் தவாறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றனர்.
சடலம் மீட்கப்பட்ட நாரந்தனை பகுதியில் உள்ள வீட்டில் தந்தை வசித்து வரும் நிலையில் அவரும் தங்கி நின்று வேலை செய்வதற்காக வெளியே சென்றிருந்தார்.

வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்த இளைஞன் அந்த வீட்டிற்கு இடையிடையே வந்து செல்வது வழமை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நபர் ஒருவர் இன்று ஆடு பார்ப்பதற்கு அந்தப்பக்கமாக சென்ற நிலையில் குறித்த இளைஞன் சடலமாக அவதானிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் இது குறித்து ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |