பிரம்படி படுகொலையின் 38வது நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு
ஈழத்தில் இந்திய இராணுவத்தின் முதலாவது தமிழினப் படுகொலைச் சம்பவமாக பதிவான பிரம்படி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் - கொக்குவிலில் முன்னெடுக்கப்பட்டது.
கொக்குவில் பிரம்படி பகுதியில் காணப்படும் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவுத் தூபியில் இன்று (12) காலை 9.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது நினைவு தூபிக்கான பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
பலர் அஞ்சலி செலுத்தினர்
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவினர்களால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
1987 ஆண்டு 11திகதி மற்றும் 12 திகதிகளில் யாழ் கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய இராணுவத்தால் 50ற்கு மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



