கட்டுநாயக்கவில் பல இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) 31 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (28) காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவர் இன்று அதிகாலை 04.35 மணியளவில் டுபாயிலிருந்து (Dubai) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இருவர் கைது
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பெண் கொண்டுவந்த பயணப் பொதியிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 100 கார்ட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவர் அதிகாலை 05.00 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 58 கார்ட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு நீதிமன்றில் முன்னிலை
இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி 31 இலட்சம் ரூபா என விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் காவல்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி நீர் கொழும்பு (Colombo) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |