குருவிட்ட சிறைச்சாலைக்கு அவசரமாக விரையும் முக்கிய அதிகாரிகள்!
இரத்தினபுரி - குருவிட்ட சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையை கட்டுப்படுத்த சிறைத்துறையின் மூத்த அதிகாரிகள் குழுவொன்று அங்கு புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், கலவரம் காரணமாக குருவிட்ட சிறைக்குச செல்லும் சாலையும் மூடப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றநிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று (07-08-2026) காலை மீண்டும் சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
உச்சக்கட்ட பதற்றம் : அடுத்தடுத்து சிறைச்சாலைகளில் வெடித்த வன்முறை - இருவர் பலி : நடந்த துப்பாக்கிச் சூடு - நீதியமைச்சரின் அறிவிப்பு
மூத்த அதிகாரிகள்
குறித்த சம்பவத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறையினரால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிறைக்கு வெளியே பாதுகாப்பிற்காக காவல்துறை குழுக்கள், காவல்துறை சிறப்பு அதிரடிப் படை மற்றும் இராணுவக்குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சிறைத்துறையின் மூத்த அதிகாரிகள் குழு ஒன்று தற்போது குருவிட்ட சிறைக்குப் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |