அமெரிக்காவில் நடுவானில் நிகழ்ந்த அனர்த்தம் : வெடித்து சிதறியது விமானம்
United States of America
Flight
By Sumithiran
அமெரிக்காவின்(us) அரிசோனா மாகாணத்தில் இரு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
அரிசோனாவின் தெற்கில் உள்ள மரானா விமான நிலையத்திற்குட்ட பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒரு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், மற்றைய விமானம் வெடித்து சிதறியது. இதில், 2 பேர் உயிரிழந்தனர்.
விமானம் வெடித்து சிதறியது
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதத்தில் வட அமெரிக்காவில் மட்டும் 4 விமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அலஸ்காவில் வர்த்தக ஜெட்லைனரும், இராணுவ உலங்கு வானூர்தியும் மோதிக்கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல, பிலடெல்பியாவில் ஒரு மருத்துவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்