கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி
By Thulsi
கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (9.06.2026) கிராண்ட்பாஸ், லூகாஸ் வீதி சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது
இவ்வாறு உயிரிழந்தவர் பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.
வாகனத்தின் சாரதி கைது
தொட்டலங்க சந்தி திசையில் இருந்து பேலியகொடை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, பிரைம்மூவர் ரக லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பிரைம்மூவர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்