சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 குழுக்கள்
பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட காவல்துறை குழுக்களை அமைப்பதற்கு காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக இன்று (19) முதல் இந்த நடவடிக்கைக்ள மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய 20 குழுக்கள் தற்போது செயற்படும் ஒவ்வொரு பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளது.
ஒடுக்க 20 குழுக்கள்
ஒவ்வொரு குழுவிலும் குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஒருவரும், 04 புலனாய்வு அதிகாரிகள், 02 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 09 அதிகாரிகள் அடங்குகின்றனர்.
கடந்த சில வாரங்களாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெற்று வரும் பாதாள உலக செயற்பாடுகளை கருத்திற் கொண்டு காவல்துறை மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக காவல்துறை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |