ஹோர்முஸை கடக்க 20 பாகிஸ்தான் கப்பல்களுக்கு அனுமதி வழங்கியது ஈரான்!
ஹோர்முஸ் நீரிணை வழியாக பாகிஸ்தான் கொடி ஏந்திய 20 கப்பல்கள் செல்ல ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின்படி, தினமும் இரண்டு பாகிஸ்தான் கப்பல்கள் இந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் கூறியுள்ளார்.
அமைதிக்கான முயற்சி
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டள்ள அவர், "இது ஈரான் எடுத்துள்ள மிகவும் நேர்மறையான மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய ஒரு நடவடிக்கையாகும், இது பாராட்டப்பட வேண்டும்.
I am pleased to share a great news that the Government of Iran has agreed to allow 20 more ships under the Pakistani flag to pass through the Strait of Hormuz; two ships will cross the Strait daily.
— Ishaq Dar (@MIshaqDar50) March 28, 2026
This is a welcome and constructive gesture by Iran and deserves appreciation. It…
இது அமைதிக்கான ஒரு முன்னோட்டமாகும், மேலும் இப்பகுதியில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர உதவும்," என்று தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பதற்றங்களைத் தணிப்பதற்கும், அமைதிக்கான முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை ஒரு அர்த்தமுள்ள படியாகும் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |