2004 இலங்கையை உலுக்கிய சுனாமியின் 19 ஆவது நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள்
தேசிய பாதுகாப்பு தினத்தை கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
2004ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 35,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 5,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.
அந்த மக்கள் அனைவரின் நினைவாக 2005 ஆம் ஆண்டு முதல் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
நினைவேந்தல் நிகழ்ச்சி
பிரதான நினைவேந்தல் நிகழ்ச்சி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) காலை 08.30 மணிக்கு காலி ஹிக்கடுவ தெல்வத்த பரலிய சுனாமி நினைவிடத்தில் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தலைமையில் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவின் பங்குபற்றுதலின் கீழ் இந் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மாவட்ட அளவில் குறித்த நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியைகள்
உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 09.25 மணி முதல் 09.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களைக் கேட்டுக் கொள்கிறது.
சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளவும், பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களை நடத்தவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தயாராகி வருகின்றனர்.
மேலும், பல்வேறு சமய வழிபாடுகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |