ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி : ஹர்ஷ டி சில்வா தகவல்
இலங்கையின் 2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அரச நிதி பற்றியக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் இந்த குழு கூடிய போதே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சட்டமூலம் தொடர்பில் குறித்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடர் மற்றும் மூலதனச் செலவீனங்கள்
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான தொடர் மற்றும் மூலதனச் செலவினங்கள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் சில விடயங்கள் தொடர்பான மேலதிக தரவுகளை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெரும்பாலான பாதீட்டு திட்ட முன்மொழிவுகள், முன்மொழிவுகளாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது பிரச்சினையாக உள்ளதாக ஹர்ஷ டி சில்வா இதன் போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.