புலமைப்பரிசில் பரீட்சை : பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (Grade 5 Scholarship exam) பெறுபேறுகளின் அடிப்படையில் 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.
குறித்த வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் (Ministry of Education Sri Lanka) இன்று (14) வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, மாணவர்கள் இன்று (14) முதல் https://g6application.moe.gov.lk என்ற இணைப்பைப் பயன்படுத்தி தங்களுக்கு கிடைக்கப்பெற்ற பாடசாலைகளை பார்வையிடலாம் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பெறுபேறுகள்
2024 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகள் கிடைக்காத மற்றும் பிற நியாயமான காரணங்களுக்காக தங்களுக்கான பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்கள் எதிர்காலத்தில் இணையவழி (Online) ஊடாக மாத்திரம் மேன்முறையீடு செய்ய முடியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேன்முறையீடுகளுக்கான இறுதித் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் அனைத்து மேன்முறையீடுகளும் இணையவழி ஊடாக மாத்திரமே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சிற்கு பிரத்தியேகமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்