2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி யார் தெரியுமா..!
இந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா வென்றுள்ளார்.
71வது உலக அழகி கிரீடம் இந்தியாவின் மும்பையில் நேற்று (09) இரவு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா
115 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றார்.
லெபனானை சேர்ந்த யாஷ்மினா ஜைடவுன் இரண்டாம் இடம் பிடித்தார்.
28 வருடங்களின் பின்னர் போட்டியை நடத்திய இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய 22 வயதான சினி ஷெட்டி போட்டியின் முதல் 08 பேரில் தெரிவாகியமை விசேட அம்சமாகும்.
உடனடியாக பெரும் பணக்காரராக
மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமிக்க உலக அழகிப் போட்டியானது, கடந்த 1951ம் ஆண்டு எரிக் மார்லி என்பவரால் தொடங்கப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர் பெரும் புகழ் மற்றும் மரியாதையை பெறுவதோடு, உடனடியாக பெரும் பணக்காரராகவும் ஏற்றம் காண்கிறார்.
What a shocker !!!!!!!
— ???? (@Rhea__Its_) March 9, 2024
These pageants are not for fainted heart…
Miss Botswana ?? is the real winner for me #MissWorld2024 pic.twitter.com/9fLHRg3Fwp pic.twitter.com/mQZCgcWxAg
காரணம் போட்டியில் வழங்கப்படும் பரிசுத் தொகை. அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த 2024ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டியில், செக் குடியரசைச் சேர்ந்த, கிறிஸ்டினா பிஸ்கோவா வெற்றி பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |