22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்: சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) அழைப்பு விடுத்துள்ளார்.
தனது எக்ஸ் (X) தளத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ''அரசியலமைப்பின் 22ஆவது திருத்தமானது வாக்காளர்களைக் குழப்புவதற்கான முயற்சி, ஜனாதிபதித் தேர்தல் செயல்முறையை அது சிக்கலாக்குகின்றது.
சர்வஜன வாக்கெடுப்பு
இந்த சட்டமூலத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதல் கிடைத்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், அதற்கான திகதியை முடிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு” என தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்புத் தினத்துடன் முரண்படும் வகையிலான திகதியை ஜனாதிபதி நிர்ணயிக்கக்கூடும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
//ITAK MP M.A. Sumanthiran called for the parties in the opposition to stage a walkout from Parliament in case the bill is taken up for vote. He…said it only confuses the electorate and potentially complicates the presidential election process.//
— M A Sumanthiran (@MASumanthiran) July 24, 2024
1/2
https://t.co/Z4gAUWZsu7
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |