நாடாளுமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம்: மகிந்த தேசப்பிரிய
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் இறுதி நிமிடம் வரை நாடளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளதென மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளதாக ஈஸ்வரபாதம் சரவணபவன் (E. Saravanapavan) தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு வருகை தந்து கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மொகமட் இன்றைய தினம் எமது அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.
ஜனாதிபதி தேர்தல்
இந்த நிலையில் நான் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கபட்டால் நாடளுமன்றத்தினை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டா என கேட்டேன் .
ஜனாதிபதி தேர்தல் நடாத்தபட்டு தேர்தல் முடிவுகள் வரும்வரை ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார் இது முதல் முறையல்ல, முன்பும் இது நடந்துள்ளது.
ஒருமுறை பிரேமதாச, சிறிமாவோ பண்டாரநாயக்க (Sirimavo Bandaranaike) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பிரேமதாச தேர்தலில் வென்று இருந்த போது ஜே.ஆர் . ஜெயவர்த்தன (J.R. Jayawardena) நாடளுமன்றத்தினை கலைத்து இருந்தார்.
தீர்க்கமான முடிவு
பல காரணங்கள் அவருக்கு இருந்தது. கடைசி நிமிடம் வரை அவர் கூறியிருந்தார். இதற்கு அப்பால் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக பல விடயங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. அனைவரும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றார்கள்.
பொதுவேட்பாளருக்கா இல்லை யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை ”என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |