ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Ministry of Education A D Susil Premajayantha Sri Lanka
By Sathangani Nov 07, 2023 02:42 AM GMT
Report

கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதனுள் மாகாணப் பாடசாலைகளின் ஆசிரியர் சம்பளம், முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் உள்ளடங்கும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அடுத்த வருடத்தில் இருந்து, தரம் 01 முதல் தரம் 11 வரையிலான பாடத்திட்டத்தை அதே வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச சுகாதார விஞ்ஞானப் பிரிவு சிறுவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சர்வதேச சுகாதார விஞ்ஞானப் பிரிவு சிறுவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!


அவர் மேலும் தெரிவிக்கையில், 

2025 வழமையான கல்வியாண்டு

“நாட்டில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக புதிய தவணைக்காக இந்த வருடம், மார்ச் மாதம் பாடசாலைகளை கால தாமதமாகவே ஆரம்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்தத் தாமதங்களைக் குறைத்து 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படும்.

ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்! | 237 Billion Rs Allocation For Education Ministry

அதன்படி, அடுத்த வருடத்தில் இருந்து, தரம் 01 முதல் தரம் 11 வரையிலான பாடத்திட்டத்தை அதே வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். இதன் ஊடாக 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை வழமை போன்று நடத்த முடியும்.

மேலும், நீதிமன்ற நடவடிக்கைகள் காணப்பட்டாலும் கூட அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் என்று நான் நினைக்கின்றேன்.

சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்கள் பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்கள் பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு


நேரத்தை முறையாக முகாமைத்துவம் செய்து, தற்போது தாமதமாக நடத்தப்படும் அனைத்துப் பரீட்சைகளையும் கட்டம் கட்டமாக நடத்துவதன் மூலம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டாகும் போது குறித்த வருடத்திற்குரிய பரீட்சைகளை அதேவருடத்தில் நடத்தி முடிக்க அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

கல்விச் சேவையில் நிலவும் வெற்றிடங்கள்

அதேபோன்று, 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நடத்தி முடிக்கப்பட்ட சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.

ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்! | 237 Billion Rs Allocation For Education Ministry

கல்வி நிர்வாக சேவையில் காணப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைகளும் நிறைவடைந்துள்ளன. விரைவாக நேர்முகத் தேர்வுகளை நடத்தி அவர்களுக்கான நியமனங்களை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மேலும், ஆசிரியர் கல்வியியலாளர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் வெற்றிடங்கள் உட்பட கல்வி சேவையில் நிலவும் அனைத்து வெற்றிடங்களையும் அடுத்த வருடம் பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் நிரப்புவதற்கு அவசியமான பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

சிங்கள மக்களின் தலைவனாகவே ரணில் தன்னை காட்ட முயல்கிறார்: சபா குகதாஸ் குற்றச்சாட்டு

சிங்கள மக்களின் தலைவனாகவே ரணில் தன்னை காட்ட முயல்கிறார்: சபா குகதாஸ் குற்றச்சாட்டு


2024 ஆம் ஆண்டுக்காக கல்வி அமைச்சின் கீழ் 237 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை இவ்வளவுதான் என்று தவறாக நினைக்க வேண்டாம்.

தேசிய கல்விக் கொள்கை 

இதனுடன் மாகாணப் பாடசாலைகளின் ஆசிரியர் சம்பளம், முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் மாகாண சபைகளின் கீழ் உள்ள கல்வி அமைச்சினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அனைத்து நிதிகளையும் ஒன்று சேர்த்தே அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கும் முழுமையான தொகையை கணக்கிட வேண்டும்.

ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்! | 237 Billion Rs Allocation For Education Ministry

அதேபோன்று, கல்வி மறுசீரமைப்புக்கான கொள்கை கட்டமைப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இது  நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுவின் ஒப்புதல் கிடைத்த பிறகு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

அரசாங்கங்கள் அல்லது அமைச்சர்கள் மாறும்போது தேசிய கல்விக் கொள்கை மாறக் கூடாது. 2024 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடந்து வருகின்றன. சில பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி 60 சதவீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 80 சதவீத பாடசாலை சீருடைகள் இலவசமாக எமக்கு கிடைக்கவுள்ளது.

பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள் ஆர்ப்பாட்டம்

பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள் ஆர்ப்பாட்டம்


2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதே எமது இலக்காகும். உலக உணவு வேலைத்திட்டம், USAID மற்றும் தனியார் துறையினரும் இதற்காக வழங்கும் ஆதரவை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கான பல்வேறு திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். இந்த வேலைத் திட்டத்திடத்திற்காக ஒரு நிதியத்தை ஆரம்பிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சை ஆகியவற்றுக்குப் பிறகு மாணவர்களுக்கு ஆங்கில மொழி, திறன் விருத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை பயிற்சிகளை வழங்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ளது.”  என தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024