காவல்துறை நற்சான்றிதழ் சேவையை 24 மணி நேரமும் முன்னெடுக்க நடவடிக்கை
காவல்துறை நற்சான்றிதழ் அறிக்கைகளைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள கடும் நெரிசல் மற்றும் தாமதத்தைக் குறைக்கும் வகையில், குறித்த சேவையை 24 மணிநேரமும் முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பணிப்புரை விடுத்துள்ளார்.
காவல்துறை நற்சான்றிதழ் பிரிவுக்கு திடீர் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்ட அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அங்கு பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை நேரில் அவதானித்த நிலையில் இது குறித்த தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளார்.
இலகுபடுத்தப்பட்ட நடைமுறை
இதனையடுத்து, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த மேலதிக பணியாளர்களை இணைத்து, 24 மணிநேர வேலைமுறை (Shifts) ஊடாகச் சேவைகளைத் தடையின்றி வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இம்மாதம் 20-ஆம் திகதிக்குப் பின்னர் காவல்துறை நற்சான்றிதழ் அறிக்கைகளை வழங்குவதற்கான புதிய மற்றும் இலகுபடுத்தப்பட்ட நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |