24 மணி நேர நீர் விநியோகத் தடை - வெளியான அறிவிப்பு
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த நீர் விநியோகத் தடையினால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தத்தைத் தெரிவிப்பதுடன், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
நீர்வெட்டு
லபுகம – கலட்டுவாவவிலிருந்து மஹரகம வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (24) மாலை 6 மணி முதல் மறுநாள் (25) மாலை 6 மணி வரை 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கலகெதர, ஹோமகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, பெலன்வத்த மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளுக்கு குறித்த நீர் விநியோக தடை ஏற்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |