வெளிநாடொன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு : பலர் பலி
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 25 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த கோகி மாகாணத்தில் ஓமலா பகுதியில் அகோஜிஜு-ஓடோ சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
தாக்குதல் சம்பவம்
இந்நிலையில், குடிமக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள், அங்கிருந்த மக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 25 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
இச்சம்பவம் குறித்து சமூகத் தலைவர் எலியாஸ் அடபோர் கூறுகையில், 'சமீபகால தாக்குதல்கள் இடைவிடாதவை.குழந்தைகள் உட்பட இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
துப்பாக்கி ஏந்தியவர்கள் வியாழன் மாலை சமூகத்திற்குள் நுழைந்து அவ்வப்போது சுடத் தொடங்கினர். எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்க, அந்தப் பகுதிக்கு மேலும் துருப்புகளை அனுப்புமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |