25 வயது இளைஞனை பத்து மாதங்களாக காணவில்லை - பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை
Sri Lanka Police Investigation
By pavan
மினுவாங்கொடை, கலஹுகொட பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 25 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன இளைஞரின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மினுவாங்கொடை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தொடர்பு இலக்கம்

குறித்த இளைஞனின் பெயர் காளிங்க ரமேஸ் சதுரங்க பெரேரா எனவும் இவரது உயரம் 5 அடி 5 அங்குலம் எனவும் காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 - 8591612 அல்லது 031- 2295223 என்ற இலக்கத்தின் ஊடாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி