ஜனாதிபதி செயலகத்திலிருந்து மாயமான 26 வாகனங்கள்: CID விசாரணைகள் குறித்து அறிக்கை
கடந்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல் போன 26 வாகனங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணைகள், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்வரையில் நிறைவடையவில்லை என தெரியவந்துள்ளது.
தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய தணிக்கை அறிக்கை ஒன்றில் மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், அவை உண்மையில் இருந்தனவா என்பதைச் சரிபார்க்க முடியவில்லை என அறிக்கை கூறியுள்ளது.
எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை
இந்த விடயம் 2021 ஆம் ஆண்டின் தணிக்கை அறிக்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வாகனங்கள் எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது தனிநபருக்கோ ஒப்படைக்கப்பட்டன என்பதற்கு எந்த எழுத்துப்பூர்வ ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |