290 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர்கள்!
தமிழகத்தில் இராமநாதபுரம் வழியாக ஒரு கோடி இந்திய ரூபா பெறுமதியான 290 கிலோ கிராம் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை பகுதியில் இருந்து படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இராமேஸ்வரம் உட்கோட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் பிரப்பன்வலசை கடற்கரை அருகே நேற்று (07.08.2026)அதிகாலை 2:00 மணிக்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
297 கிலோ (கஞ்சா) போதைப்பொருள்
அப்போது அங்கு வந்த வான் ஒன்றை மடக்கி சோதனை செய்த போது 290 கிலோ கிராம் (கஞ்சா) போதைப்பொருள் பொதிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த கஞ்சா தொகை மதுரையில் இருந்து கடத்தி வரப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் காற்று குறைவாக வீசும் நேரத்தில் படகில் இந்த கஞ்சா தொகையை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |