அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குங்கள் : செங்கலடியில் கவனயீர்ப்பு போராட்டம்!

Batticaloa Saudi Arabia Protest Sivarasa Anojan
By Jaso Sep 22, 2026 03:57 PM GMT
Report

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மட்டக்களப்பு – செங்கலடி நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

செங்கலடி பிரதான வீதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அனோஜனுக்கு சவுதி அரேபிய அரசாங்கத்தினால் மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சி

சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, இலங்கை அரசாங்கம் சவுதி அதிகாரிகளுடன் இராஜதந்திர ரீதியில் தலையிட்டு, மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குங்கள் : செங்கலடியில் கவனயீர்ப்பு போராட்டம்! | Grant Pardon To Anojan Protest In Chenkaladi

இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர்கள், ஏறாவூர் நகர சபை பிரதி தவிசாளர் ஞா. கஜேந்திரன், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர்களான செ. நிலாந்தன், அ. நிதர்சன், மு. உதயராஜ் மற்றும் க. நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், செங்கலடி வர்த்தக சங்க உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் பங்கேற்று அனோஜனுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு, “அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் : இலங்கை அரசின் அடுத்த கட்ட நகர்வு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் : இலங்கை அரசின் அடுத்த கட்ட நகர்வு

போராட்டத்தை முன்னெடுக்க பிரதான காரணம் 

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குவதற்காக சவுதி அரேபிய அரசாங்கத்துடன் தேவையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, அவரை தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க பிரதான காரணம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குங்கள் : செங்கலடியில் கவனயீர்ப்பு போராட்டம்! | Grant Pardon To Anojan Protest In Chenkaladi

எனவே, தங்களது கோரிக்கைகளை செவிமடுத்து அனோஜனை காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.   

அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்குக : இலங்கையிலிருந்து கூட்டுக் கோரிக்கை!

அனோஜனுக்கு பொது மன்னிப்பு வழங்குக : இலங்கையிலிருந்து கூட்டுக் கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

         

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்