பில்லியன் கணக்கான டொலர் வருமானத்தை ஈட்டிய சுற்றுலாத்துறை
கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா சீதை அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் விஜித ஹேரத் இந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகள்
இந்த வருட இறுதிக்குள் மற்றுமொரு வருமான இலக்கு 3.7 பில்லியன் டொலரை எட்டும் என்று அவர் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், “இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள்தான் அதிக அளவில் உள்ளனர்.
பலர் மத ரீதியாக சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். கோனேஷ்வரம் ஆலயம், கதிர்காமம் போன்ற பல்வேறு இடங்களைக் காண ஏராளமான இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
3.7 பில்லியன் டொலர் வருமானம்
அது எங்களுக்கு மிகப்பெரிய பலம். நாம் பொருளாதாரத்தில் வங்குரோத்து நிலையை அடைந்திருந்தோம் என்பது உங்களுக்கு தெரியும். இந்த நிலையிலிருந்து வெளியேற, சுற்றுலாத் துறையை விரைவாக மேம்படுத்த வேண்டும்.
அதற்காக நாங்கள் ஒரு இலக்கை நோக்கிச் செல்கிறோம். 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே வந்துள்ளனர். கடந்த 6 மாதங்களில் நாங்கள் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளோம்.
இந்த வருடம் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளோம். அதற்காக பெரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
