யாழ் போதனா வைத்தியசாலைக்குள் மதுபோதையில் அத்துமீறிய மூவர் கைது
Sri Lanka Police
Jaffna
Jaffna Teaching Hospital
By Laksi
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் (Teaching Hospital Jaffna) மதுபோதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு குழப்பத்தில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (25) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிடும் நேரம் முடிந்த பின்னர் தம்மை உள்நுழைய அனுமதிக்குமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு குழப்பத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
வைத்தியசாலை நிர்வாகம் யாழ்ப்பாணம் (Jaffna) காவல் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த நிலையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து மதுபோதையில் குழப்பத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்