மூன்றரை கோடி பணமோசடியில் சிக்கிய நபர்
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டுபாய் நாட்டில் உணவகம் மற்றும் வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்புகள் கிடைப்பதாகக் கூறி, ஒரு நபரிடம் இருந்து 12 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் வரையிலான தொகையை சந்தேக நபர் பெற்றுள்ளார்.
இவர்களிடமிருந்து சுமார் மூன்று கோடி ரூபாயை மோசடி செய்ததாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக ஹட்டன் காவல்நிலையத்திலும், ஹட்டன் காவல்துறை அதிகாரியின் காரியாலயத்திலும் மொத்தம் 49 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் 12 பேர் டுபாய்க்கு அனுப்பப்படுவதாகக் கூறி கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், "பதிவு செய்யப்பட்ட அனைத்து முறைப்பாடுகளுக்கும் காவல்துறையினரால் தீர்வு வழங்கப்படும். இது குறித்து எவரும் அச்சப்படத் தேவையில்லை. பிரதான சந்தேக நபரை கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஹட்டன் காவல்துறையினர் மற்றும் ஹட்டன் குற்றவியல் காவல்துறையினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





