யாழில் திருவிழாவில் அனர்த்தம் ...! யானை தாக்கி 4 வயது குழந்தை உட்பட இரு பெண்கள் காயம்
யாழ்ப்பாணம் (Jaffna) - தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் யானை தாக்கிய நிலையில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் காயமடைந்த நான்கு வயது குழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், “தாவடிப்பகுதியில் உள்ள குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் திருவிழாவிற்காக யானை கொண்டுவரப்பட்டிருந்தது.
காவல்துறையினர் விசாரணை
இதன்போது யானைக்கு மதம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதம் பிடித்த யானை தாக்கியதில் இரண்டு பெண்களும், ஒரு நான்கு வயது குழந்தையும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
