மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி:309 முன்பள்ளிகளை தரம் உயர்த்தும் பணிகள் ஆரம்பம்
நாடு முழுவதும் உள்ள சுமார் 309 முன்பள்ளிகளை முழு வசதிகளுடன் கூடிய பாடசாலைகளாக தரம் உயர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், புதிதாக உருவாக்கப்பட்ட கருவலகஸ்வேவ மற்றும் மஹகும்புக்கடாவல முன்பள்ளிகள் சமீபத்தில் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள உள்ளூர் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தப் பாடசாலை மேம்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
புதிய பாடத்திட்டம்
மேலும் புதிய பாடத்திட்ட சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டில் 2 ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கும், 2028 ஆம் ஆண்டில் 3 ஆம் மற்றும் 7 ஆம் தரங்களுக்கும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
2029 ஆம் ஆண்டில் 4, 8 மற்றும் 10 ஆம் தரங்களுக்கும், 2030 ஆம் ஆண்டில் 5, 9 மற்றும் 11 ஆம் தரங்களுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
உயர்தர இரண்டாம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2031 ஆம் ஆண்டில் 12 ஆம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |