ஹமாஸ் அமைப்பால் 31 அமெரிக்கர்கள் படுகொலை
By Sumithiran
இஸ்ரேல் மீது கடந்த 07 ஆம் திகதி சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பு நடத்திய திடீர் தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதன்படி உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 அமெரிக்கர்களை காணவில்லை
இந்த தகவலை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி செவ்வாயன்று தெரிவித்தார்.

அத்துட்ன் இன்னமும் 13 அமெரிக்கர்களை காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் அதிபர் பைடன் இஸ்ரேலுக்கு செல்லவுள்ள நிலையில் மேற்படி தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்