உலக தமிழர் சதுரங்க பேரவையின் மூன்றாவது சதுரங்க போட்டி நாளை..!
உலக சதுரங்க பேரவையின் 3வது சதுரங்க போட்டி நாளை (23) ஞாயிற்று கிழமை London Alperton Community Hall HA0 4PW இல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
பிரித்தானியாவின் பல பகுதிகளில் இருந்து 7 வயது முதல் 61 வயது வரை மொத்தமாக 165 ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியிட உள்ளனர்.
வேக சுற்று போட்டிகளில் 10,13,16 வயது மற்றும் open என 4 பிரிவில் 1st, 2nd, 3rd, 4th, 5th சிறந்த பெண் போட்டியாளர்களுக்கும், மூத்த போட்டியாளர்களுக்கும் வெற்றி கிண்ணங்கள் வழங்கப்படவுள்ளன.
விருந்தினர்கள்
குறித்த போட்டிகள், காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணிவரை ஒவ்வொரு சுற்றுகளாக போட்டி இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
காலை ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக London Assembly உறுப்பினர் ப்ரெண்ட் மற்றும் ஹாரோ கிருபேஷ் ஹிரானியும் சிறப்பு விருந்தினராக Wembley Central ward councillor ராஜன் சீலனும் போட்டியை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.
பிற்பகல் போட்டியின் இறுதியில் பிரதம விருந்தினராக Brent North MP Barry Gardiner மற்றும் சிறப்பு விருந்தினராக, Pinner Ward Councillor Kuha Kumaran அவர்களும் பரிசளிப்பு வழங்கி இந்த நிகழ்வை சிறப்பிக்கவுள்ளனர்.
அனைவருக்கும் அழைப்பு
உலக தமிழர் சதுரங்கப் பேரவையின் தலைவர் தர்மரட்ணம் ரகுராஜ் தலமையில் இவ் அமைப்பின் ஸ்தாபகர் கந்தையா சிங்கத்தின் நெறிபடுத்தலிலும் இந்த பிரமாண்டமான சதுரங்க போட்டி மூன்றாவது முறையாக நடைபெற உள்ளது.
இந்த சதுரங்க போட்டிக்கு லண்டனை மையமாக கொண்டு இயங்கும் Lotus Caring Hands பிரதம அனுசரனையாளராகவும், இணை அனுசரணையாளர்களாக First Choice Badminton Club ம் Spot on Money யும் ஆதரவளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்னணியில், விழாவை சிறப்பிக்க அனைவரையும் வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்