இந்துசமுத்திரத்தில் 4 அமெரிக்க அதிரடிகள்!
இந்தியாவின் தென்பகுதி தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தல் இடம்பெற்றுவரும் நிலையில் ஆசியக்கடற்பரப்பில், இந்தியா இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் அருகில் ஈரானுடன் தொடர்புடைய 4 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அதிரடியாக மடக்கிய செய்திகள் பகிரங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் டோரேனா என்ற ஒரு சூப்பர்டேங்கர் எனப்படும் பாரிய எண்ணைத் தாங்கிகப்பல் தென்னிந்தியக் கடற்கரைக்கு அப்பால் இடைமறிக்கப்பட்டு தற்போது அது அமெரிக்கக் கடற்படை டிஸ்ரோயர் ரக போர்க் கப்பலின் பாதுகாப்பில் உள்ளது.
இலங்கைக்கு தெற்கே ஏற்கனவே ரிபனி என்ற ஒரு எண்ணெய்தாங்கி கப்பல் சிறிலங்காவின் தேவேந்திரமுனைக்கு அப்பால் அமெரிக்கவால் கைப்பற்றப்பட்ட நிலையில் இந்து சமுத்திரத்தில் அமெரிக்க அதிரடிகள் தொடர்கினறன.
இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு என அமெரிக்க கடற்படை பாரிய மிதக்கும் தளம் (Expeditionary sea base) ஒன்றை இந்து சமுத்திரத்தில் நிறுத்தியுள்ளது.
இந்த மிதக்கும் ததளத்தில் இருந்து உலங்குவானூர்திகளின் புறப்பட்ட அணிகள்தான்; நேற்றுமுன்தினம் ரிபனி கப்பலை கைப்பற்றியுள்ளன.
ஆகமொத்தம் இந்து சமுத்திரத்தின் கடற்பரப்பில் தனது முற்றுகையை நடைமுறைப்படுத்த அமெரிக்க கடற்படையின் 7வது கடற்படைபிரிவு சுற்றிச்சுழலும் நிலையில் இலங்கையின் ஈஸ்ரர் சதிகளை அம்பலப்படுத்திய ஆசாத் மௌலானா இதுவரை சுவிஸில் இருந்ததாக கருதப்பட்ட நிலையில் அவர் தற்போது பிரான்சில் தங்கியிருப்பதாக சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் கூறும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு….
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |