பொது இடத்தில் சிறிலங்கா இராணுவ சிப்பாய்களின் அநாகரிக செயற்பாடு
srilanka
army
public
drinking alcohol
By Sumithiran
பொது இடத்தில் மது அருந்திய நிலையில் குழப்பம் விளைவித்த சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த நான்கு சிப்பாய்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை - கோமரங்கடவல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நான்கு சிப்பாய்களும் பொது இடத்தில் மது அருந்திவிட்டு அநாகரிகமான முறையில் செயற்படுவதாக காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த நான்கு சிப்பாய்களையும் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் கோமரங்கடவல - கரக்கஹவெவ பகுதியைச் சேர்ந்த 25 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி