கட்டுநாயக்கவில் இன்று அதிகாலை சிக்கிய தங்க பிஸ்கட்டுகள்
நான்கு கோடியே நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான 16 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் கடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (13) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலியில் வசிக்கும் 28 வயதுடைய வர்த்தகரான இவர் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
சிறிலங்கன் எயார்லைன்ஸில் வந்திறங்கிய வர்த்தகர்
அவர் இன்று காலை 06.05 மணியளவில் டுபாயிலிருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சிக்கிய தங்க பிஸ்கட்டுகள்
இந்த தங்க பிஸ்கட்டுகள் 08 வீதம் 02 பொட்டலங்களாக பொதிசெய்யப்பட்டு, மறைத்துவைக்கப்பட்டு, அவற்றை அவர் உடலில் சுமந்து சென்ற பக்க பையில் பொருத்தி, விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

தற்போது, இந்த வர்த்தகர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 2 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்