போதைப்பொருள் பாவனை : நான்கு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு நேர்ந்த நிலை
போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டின் பேரில், காலி மாவட்டத்தின் இரண்டு காவல் நிலையங்களைச் சேர்ந்த நான்கு காவலர்கள் நேற்று(03) முதல் தங்கள் பதவிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதி காவல்துறைத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அம்பலங்கொட காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களும், அஹுங்கல்ல காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவலரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உறுதிப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பாவனை
காவலர்கள் குழு ஒன்று போதைப்பொருள் உட்கொண்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பலாங்கொட, அஹுங்கல்ல, பெந்தோட்ட மற்றும் எல்பிட்டிய காவல் நிலையங்களைச் சேர்ந்த நான்கு காவலர்கள் எல்பிட்டிய ஆதார மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டனர்.

இந்த நான்கு காவலர்களும் கஞ்சா உட்கொண்டதை சட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, அம்பலங்கொட உதவி காவல் கண்காணிப்பாளர் இந்த பணி இடைநீக்க உத்தரவை பிறப்பித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்