மைத்திரியை முந்திய அனுர : வெளியான புதிய அறிக்கை
வெரிடாஸ் றிசேர்ச் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது 18 மாத பதவிக்காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விட அதிக சட்டமூலங்களை நிறைவேற்றியுள்ளார்.
நாட்டில் இருந்து ஊழலையும் மோசடியையும் ஒழித்து, சிறந்த ஆட்சியை நிறுவுவதற்காக இந்த நாட்டு மக்கள் இரண்டு முறை வாக்களித்தனர். ஒரு முறை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், மற்றொரு முறை அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அனுரவின் 136 நாள் பதவிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள்
வெரிடாஸ் ரிசேர்ச் வெளியிட்ட அறிக்கையின்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 126 நாள் பதவிக்காலத்தில் 54 சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டும், 48 சட்டமூலங்களை தாக்கல் செய்தும் உள்ளார். அவற்றில் 20 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது 136 நாள் பதவிக்காலத்தில் 50 சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டும், 43 சட்டமூலங்களை தாக்கல் செய்தும், அவற்றில் 32 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அதிகளவில் சட்டமூலங்களை நிறைவேற்றிய மைத்திரி
இருப்பினும், இரு ஜனாதிபதிகளின் முதல் ஆறு மாதங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அதிக எண்ணிக்கையிலான சட்டமூலங்களை நிறைவேற்றியுள்ளார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 41 நாள் பதவிக்காலத்தில் 17 சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டும், 16 சட்டமூலங்களை தாக்கல் செய்தும், அவற்றில் 6 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன என்றும் அது காட்டுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 7 மணி நேரம் முன்