தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த ஈழத் தமிழர்கள்!
இலங்கையில் இருந்து சிறுவன் ஒருவர் உள்ளிட்ட மூன்று ஈழத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த ஐந்தாம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு உள்ள ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இதற்கமைய, மேலும் மூவர் இன்று (22) காலை தஞ்சம் அடைந்துள்ளதாக கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் கடலோர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணை
சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்தில் சூடு தாங்க முடியாமல் ஐந்தாம் மணல் தீடையில் தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகளை கடலோர காவல்துறையினர் மீட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, சூடு தாங்க முடியாமல் தவித்த அகதிகள் கடலோர காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இலங்கையிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த தரப்பினர் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |