இலங்கையின் சுகாதாரத்துறைக்கு ஜப்பானிடமிருந்து 4000 மெற்றிக் தொன் டீசல்
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இலங்கை சுகாதார சேவையின் நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 40,000 மெட்ரிக் தொன் டீசலை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இன்று(19) இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கொழும்பு துறைமுகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும், டீசல் விநியோகத்தின் வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக, அதிகாரிகள் அதிநவீன எரிபொருள் முகாமைத்துவ தகவல் அமைப்பை (FIMS) அறிமுகப்படுத்தியுள்ளனர்.
எரிபொருள் ஒதுக்கீடு
இந்த அமைப்பு சுகாதார நிறுவனங்கள் முழுவதும் டீசல் விநியோகத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும், வாகனங்கள் மற்றும் வசதிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடுகளின் விரிவான பதிவுகளை பராமரிக்கிறது.
அத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து டீசல் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையின் சுகாதாரத் துறையானது தொழிலாளர்கள், மருந்து மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை உட்பட பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |