இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த் தாக்கம்: 45 சுகாதாரப்பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அதிக டெங்கு ஆபத்துல்லா பகுதிகளாக இலங்கை முழுவதிலும் உள்ள 45 ஆரம்ப சுகாதார பிரிவுகளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 10 வலயங்கள் கொழும்பு மாவட்டத்திலும், எட்டு வலயங்கள் கம்பஹா மாவட்டத்திலும், களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் தலா மூன்று வலயங்களும், கண்டி மாவட்டத்தில் 11 வலயங்களும், மாத்தளை மற்றும் காலி மாவட்டங்களில் தலா இரண்டும், புத்தளம் மாவட்டத்தில் இருந்து நான்கு வலயங்களும் மட்டக்களப்பு மற்றும் குருநாகலில் தலா ஒன்றும் அதிக ஆபத்துல்லா டெங்கு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டையில் பதற்ற சூழ்நிலை: காவல் நிலையத்திற்கு முன் குவிக்கப்பட்ட அதிரடிப் படையினர் (படங்கள்)
அதிகளவான டெங்கு நோயாளர்கள்
இதுவரை 34,645 நோயாளர்கள் பதிவானதன் அடிப்படையில் மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் 15,464 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 14,596 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4,585 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,068 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 3,371 பேரும், கேகாலில் 3,065 பேரும் பதிவாகியுள்ளனர், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 2,933, மற்றும் குருநாகல் மாவட்டத்தில் இருந்து 2,797 பெரும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி நவம்பர் மாதத்தில் மாத்திரம் மொத்தம் 4,347 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.