யாழில் இலங்கை விமானப்படையின் நான்காம் நாள் வான் சாகச கண்காட்சி
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.
“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த 06ம் திகதி ஆரம்பமாகிய கண்காட்சி நாளை வரை காலை 10 மணி முதல் இரவு 11 மணிரை இடம்பெறவுள்ளது.
இன்றைய நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதன்போது பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன.
இலங்கை விமானப்படையின் சாகசம்
இதன்போது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவன் கொழும்பில் நடைபெறவுள்ள விமான துறைசார் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு கோரினார்.

இதன்போது விபரங்களை தருமாறும் பரிசீலிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். மேலும் மாணவனுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |














ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 13 மணி நேரம் முன்