அரசின் 55 நிறுவனங்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ், பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட 55 அரச நிறுவனங்கள் கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 86,000 கோடி ரூபா நட்டத்தை சந்தித்துள்ளன.
பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இது முந்தைய ஆண்டில் (2021) அந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை விட அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மிகப்பெரிய நஷ்டம் பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஆகும். கூட்டுத்தாபனத்தின் நட்டம் 62,800 கோடி ரூபா எனத் தெரிவித்த பேராசிரியர், சிறிலங்கன் விமான சேவைக்கு இருபத்து நான்காயிரத்து எண்ணூறு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபை
அந்த காலப்பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டம் 4700 கோடி ரூபா என வசந்த அத்துகோரல தெரிவித்தார். இதேவேளை, கடந்த 2021ஆம் ஆண்டு அரசாங்கத்தை உத்தரவாதமாக வைத்து அந்த 55 நிறுவனங்களும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்து அறுநூறு கோடி ரூபா கடனாகப் பெற்றுள்ளதாக நிதியமைச்சின் அறிக்கைகள் காட்டுவதாக அவர் கூறினார்.
அன்றைய காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி 58 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமையினால் இந்த நிறுவனங்களின் நஷ்டம் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கிய காரணம் என தெரிவித்த பேராசிரியர், நாடு முழுவதும் 527 அரச நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
527 நிறுவனங்களில் 290 நிறுவனங்கள் பொது தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் மேற்பார்வையில் உள்ளதாகவும் ஏனைய நிறுவனங்கள் வருடாந்த அறிக்கையை கூட சமர்ப்பிக்கவில்லை எனவும் அத்துகோரல மேலும் தெரிவித்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
